உடற்பயிற்சி

அலைகள்தாம் கடல் செய்யும் உடற்பயிற்சி ஆகும்
ஆழியைப்போல் சக்திபெற உடற்பயிற்சி செய் நீயும்
இன்றுமுதல் நீ தொடங்கினால் ஏற்படும் முன்னேற்றம்
ஈரைந்து விரல்முதல் இதயம்வரை காணும் நல்லமாற்றம்
உடல் முழுதும் வியர்க்கும்வரை தினமும் செய்வாய்
ஊரே வியக்கும் நல்ல உடல்நலத்தைப் பெறுவாய்
எந்தவித புதுமுயற்சிக்கும் நேரமில்லை எனக்கூறுவது வாடிக்கை
ஏராளமாக காலவிரயம் செய்பவர் கூறுவது வேடிக்கை
ஐந்து நிமிடமாவது செலவழித்து இதனை நீயும் படித்துவிடு
ஒருவாரமாவது உடற்பயிற்சியை தினந்தோறும் செய்துவிடு
ஓட்டமோ ஆட்டமோ நீச்சலோ நடையோ ஏதேனும் செய்வாய்
ஔடதம் இதுவே நல்லுடல் நலத்திற்கு என்பதை அறிவாய் ..
-கலைசொல்லன்