தோற்றது என் தூக்கம்!

சாம்பல் பறக்க மறந்து
பனியாய் இறங்குகிறது,
சண்டை, சச்சரவில்லாமல்
சாலை சமாதானமாய்,
எவனுக்கோ பயந்து மெல்ல
எட்டிப் பார்க்கும் சூரியன்,
எதையோ எண்ணி நாணங்கொண்டு
மறைந்துகொண்ட சந்திரன்,
ஊர் படிக்க
ஊரெல்லாம் வீசியெறிந்த நாளிதழ்களை
விசிறிக் கொண்டிருக்கும் பெருசுகளும்,
வீசிய களைப்பில் சிறுசுகளும்,
வெள்ளை ஓவியமில்லா
வேற்று வாசல்களில்
வேண்ணையற்ற வெள்ளை பாலும்,
குப்பை களைந்து சுத்தமாய்
குளிக்காத வாசல்களில்
காளைமாட்டின் புதியவரவான
கார்களின் அணிவகுப்பும்,

அமைதியாய் தன்
வேலைகளை பார்க்க,

அடங்காபிடாரி அலாரமும்
அடுத்த வீடு மிக்ஸ்சியும்
போட்டியிட

வென்றது விடியல்
தோற்றது என் தூக்கம்!

எழுதியவர் : எழுத தெரியாதவன் (5-Feb-12, 2:16 pm)
பார்வை : 294

மேலே