கடலை காண்போம் கற்பனையில்!

கற்பனைக்கு தீவைத்து கிழவியான கல்விமணந்து
கடலை காண்பது கற்பனையிலோ!
கல்லாக மனம்படைத்து கருணையும் கல்லாக
மாறிய மாந்தரிடையில் கற்பனையா?
கவலையே கடலாக கண்முன்னே இருக்க
கற்பனை இவனுக்கு இருக்குமோ?
கல்லறையில் காதலெனும் பூபூத்த பின்னர்
கற்பனை காதல் கடலாய்!
கனவில் மீன்களை மணக்கும் வேளையில்
கற்பனை கடலில் மூழ்கிவிட்டேன்!
காலையில் எழுந்து காதலை நினைத்து
கற்பனையில் கவிதைகள் கடலாக!
எத்தனை கவிதைகள் எழுதிய பின்னரும்
கற்பனையில் கடலே கவிதையாக!
கடலைகாண கடந்துசென்ற வழியெல்லாம் குப்பைகள் கண்முன்னே கண்ணே இனி
கடலை கற்பனையில் காண்போம்!!!

எழுதியவர் : க.ரகுராம் (5-Feb-12, 5:11 pm)
பார்வை : 246

மேலே