தூங்கும் அகிம்சைப் புலி

வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே
வீரம் இல்லை வெறுமையடி!
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே
தாய்மை காட்டும், தடங்களடி!
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே
வீரம் இருந்து வலிமறைக்கும்!
தொட்டுப் பார்க்க அதனுள் தானே
தூங்கும் அகிம்சைப் புலிதெரியும்!
< ௦ >

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (6-Feb-12, 8:16 pm)
பார்வை : 283

மேலே