பார்க்காதே பார்க்காதே
ஊரெல்லாம் சுற்றி திரியும் காற்றை
உயிர் வாழ சுவாசிக்கும் மனிதர்கள்
பார்க்கவில்லை தென்றலாய் வீசும்
காற்றின் ஜாதி என்னவென்று..,
எங்கோ விதைத்த, எங்கோ முளைத்த,
எவனோ அறுவடை seitha நெல் - அரிசியாக
சமையல் கட்டில் நுழைந்த போது
பேதம் தோன்றவில்லை உண்கிற உணவில்..,
நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை வண்டியில் - ஆபத்து நேர்ந்து
உதிரம் தேவைப்படுகையில் - மனிதநேயத்தோடு
ஓடோடி ஒருவன் வந்து உதிரம் தருகையில்
ஏன் பார்க்க மறுக்கிறோம்
பேதம் காட்டும் ஜாதி என்னத்தை..,
உயிர் வாழ தேவையான பல நிலைகளில்
யவரும் பார்ப்பதில்லை ஜாதி,
வீம்பிற்காக முந்தைய மனிதன் கடைபிடித்ததை
இன்றைய மனிதனும் தொடர்வது நியாயமாகுமா???