எனக்காக மட்டும்!
கவிஞனே!
உனக்காக புது எழுதுகோல் - என் பெயர் சொல்லி சாதனை படைப்பாய்!
ஆறடி அழகே!
உன் ஆண்மை எனக்காக மட்டும் சேமிப்பாய்!
பலா போன்றவனே!
உன் இனிய உட்புறம் எனக்காக மட்டும் திறப்பாய்!
தீ விழியானே!
உன்னை இப்படி அழைப்பவள் நானாக மட்டும் செய்வாய்!
ஆடவனே!
உன்னுள்ளும் மென்மையான பெண்மை எனக்காக மட்டும் காட்டுவாய்!
தலைவனே!
எனக்கு மட்டும் தலைவனாய் ஆகும் தேதி என் காதில் மட்டும் ஒலிப்பாய்!
இதயவனே!
நீ எனக்காக மட்டும் புதியதாய் பிறப்பாய்! எங்கிருக்கிறாயோ என் கனவுக் கணவனே!

