ஆயிரம் ரூபாய்..........

விடியல் பொழுது
வேகமாய் எழுந்தேன்
மெல்லமாக சிரித்தது என் மூக்கு கண்ணாடி

என் கைபேசியின் சிணுங்கல்கள்
என்னை எரிச்சலாய் எரிமூட்டியது

சகித்துக்கொண்டேன் எல்லாவையும்
இன்று மாத கடைசி நாள்
என்னுடைய சம்பள நாள் இன்று
எண்ணியதும் மின்னலாய் பாய்ச்சிய வேகம் என்னில் நான் மிருட்சமானேன்

ஓடோடி சென்ற எனக்கு ஒரு இடி
மேலாளரின் மெத்தன பார்வை
என்னை கேள்விக்குறியாய்??
புரியவில்லை எதுவும்
எல்லார் முன்னும் புரிந்ததுபோல் நானும்

மெல்லிதாய் குரல் கேட்டேன் என் முதலாளி குரல் அதட்டலாய்
உள்ளே சென்றேன் குழப்பமாய்
என் நண்பரின் அழுகுரல் மன்னிக்க வேண்டி என் முதலாளியிடம்......
புரிந்தது எனக்கு அவன் என்னிடம் கேட்ட ஆயிரம் ரூபாய்..........

எழுதியவர் : ரபிக் (8-Feb-12, 12:39 pm)
சேர்த்தது : mdrafiq1981
Tanglish : aayiram rupai
பார்வை : 192

மேலே