கருவறைக்குள் ஒரு அழுகை
சீ சீ சீ எனக்குப் புடிக்கலே
சேனலே திருப்பு கெட்ட சினிமா
பாக்காதே அம்மா பாக்காதே
அய்யய்யோ அருவருக்கு
அந்தப் பாடலே ஆப் பன்னிரு
கேட்காதே அம்மா கேட்காதே
கொமட்டுது கொமட்டுது
காளான் பேல் பூரி பிஸ்சா எல்லாம்
தின்னாதே அம்மா தின்னாதே
எழவெடுத்த இந்த டிவிய விட்டு
எப்போதான் நீ எந்திரிப்பே...?
ஏகாதசி இன்னைக்காது
எந்திரிச்சி குளிச்சி கோயிலுக்கு போம்மா...!
கீர்த்தனைகள் அங்கே சொல்வார்
கிளிகள் சத்தம் செவி இனிக்கும்
தெப்பக் குள கரைதனிலே
தவம் இருக்கும் வெள்ளைக் கொக்கு
திகட்டாத அழகெல்லாம்
தெய்வ வீட்டில் நிறைஞ்சிருப்பு
தெரியாம தேஞ்சி போயி
திரியிறியே டிவி சீரியலுலே...
போக்கிரியா நா பொறக்கனுமா
பொறம்போக்கா அலையனுமா
கருவறைக்குள்ளே கதறுறேன் நான்
காது கொடுத்து கொஞ்சம் கேளும்மா...!