கரண்டு போச்சி
தண்ணித் தட்டுப்பாடு வாழ்க
நிலக்கரி நீ நீடுழி சாக.........
சொவரேரி குதி மச்சான்
சூப்பரா கரண்டு போயிடுச்சி
களவாடி கலக்கிப் போடுவோம்
கறுப்புப் போர்வைக்குள் ஒளிஞ்சிக்கோ நீ
வெள்ள வேஷ்டிக் கோஷ்டி எல்லாம்
விடிகாலைல சுருட்டும் சுருட்டும்
வெளக்கமத்தின பின்னாலே
வெரைவா நாமே சுட்டுப் போடலாம்
வழிலே எவனும் புடிச்சா
வட்டியும் மொதலும் கொடுத்துடலாம்
வாங்கி அவன் வழி விடுவான்
வாயெல்லாம் ஈ ஈ ஈ ஈ ஈன்னு சொல்லி
வாழலாம் திருடா நீ
வாழ்வாங்கு வந்திடலாம்...!