கண்ணீர் கண்ணீர் கண்ணீர்

மனிதன் பிறக்கும் போதும் கண்ணீர்
அவன் இறக்கும் போதும் கண்ணீர்...

மனிதன் வாழும் போதும் கண்ணீர்
அவன் வாழ்ந்த பின்பும் கண்ணீர்...

மனிதன் பிரியும் போதும் கண்ணீர்
அவன் சேரும் போதும் கண்ணீர்...

மனிதன் பாசம் கொள்ளும் போதும் கண்ணீர்
அவன் வேஷம் கொள்ளும் போதும் கண்ணீர்...

மனிதன் கோபம் கொள்ளும் போதும் கண்ணீர் அவன் நேசம் கொள்ளும் போதும் கண்ணீர்...

கண்ணீர்... கண்ணீர்... கண்ணீர்...

மனிதன் தண்ணீர் அருந்தாமல் இருந்துவிடுவான்
அவன் கண்ணீர் சிந்தாமல் இருப்பதில்லை...

மழையில் நனைந்து கொண்டு நீ அழுதாலும்
உன் கண்களில் இருந்து வருவது கண்ணீர் தான் என்று
உண்மையான அன்புக்கு மட்டுமே தெரியும்....

கண்ணீருக்கு மருந்து உண்மையான அன்பு மட்டும் தான்....

எழுதியவர் : மின்மினி (8-Feb-12, 3:42 pm)
பார்வை : 313

மேலே