கண் தந்த தந்தைக்காக ...
பிறப்பிலே கண்ணின்றி
உதித்தேன் ...
கலைகளை கற்றுணர்ந்து
வளர்ந்தேன்...
உணர்வுகள் உழைப்பினால்
உயர்ந்தேன்...
ஊக்கங்கள் இல்லாமல்
தவித்தேன்...
காதலில் எதிர்வீட்டை
எதிர்த்தேன்...
ஆதலால் தந்தை
அன்பை இழந்தேன்..
கண்கள் இல்லா குறைகளை
தந்தை தீர்த்தார்...
காதலால் குறைகள்
நீண்டது...
திருமணம் முடிந்தும்
வெறுத்தார்..
பொறுத்தேன் தந்தையிடம்
பேசும் நாட்களுக்காக...
கடைசி வரை பேசாமல்
சென்றுவிட்டார்...
பேச்சை நிறுத்தி
கண்ணை கொடுத்தார்..
கண்ணுக்காக சிரிப்பதா
தந்தைக்காக அழுவதா.
விடை கூறுங்கள் நண்பர்களே...
சமீபத்தில் கண்ணில்லாத என் நண்பரின் தந்தை ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார்... அவரின் கண்கள் என் நண்பருக்கு பொறுத்த பட போகிறது... அவரின் நினைவாக இந்த கவிதை...