[58] அரங்கநாதன் தெருவின் அழகு!
பொருள்வாங்க வந்தோர் போருதுசே னைபோல்
இருமருங்கும் செல்லும் இயல்பால் -திருவீதி
சிந்தும் வியர்வையால் சேறாம் ! குழம்பாமே!
வந்துநீ பாரவ் வழகு!
முந்த விழைவோர் முன்தள்ள முன்னிருந்து
வந்தோர் எதிரே இடைமறிக்க -எந்தையே!
எந்தவொரு கர்ப்பிணியும் இங்கு வரப்பேறு
தந்துவிடும் ! இல்லை தடை!
-௦-
(பேறு தந்துவிடும் -குழந்தை பிறந்துவிடும்)