[59] வெளிச்சம் எங்கே!

இருதயத்தைப் படிப்பதற்கு ஏடா வேண்டும்?
எழுகதிரைப் பார்ப்பதற்கும் விளக்கா வேண்டும்?
இருந்தாலும் சிலரிங்கு குருடர் என்போல்!
இதையவர்க்கே எழுதியதாய் எண்ண வேண்டாம்!

விருப்பத்தைச் சொல்வார்முன் பொறுப்பைச் சொல்வேன்!
பொறுப்புடனே செய்வார்முன் விருப்பம் கேளேன்!
வெறுப்பூட்ட வெளிநகைத்து வருவார் முன்னே
விரும்பிடுவார் எனநயந்து வியந்து சொல்வேன்!
நெருப்பெடுத்து நெருப்பணைக்க முடியு மாமோ?
நினைக்காது கோபிப்பேன்! கோபிப் பார்முன்
கருப்படித்த கண்ணாடி மனதில் கட்டிக்
காத்திருப்பேன் விடியலுக்கே! வெளிச்சம் எங்கே?

-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Feb-12, 7:39 am)
பார்வை : 222

மேலே