முயலுங்கள் வெற்றி வரும்

பூக்களிடம் நீங்கள்
புன்னகையை பழகுங்கள் - உங்களை
புரியாதவர்களிடம் நல்ல
பொறுமையை பழகுங்கள்

முட்கள் தைக்குமென்று
முன்னேறும் பாதம் பின் செல்லலாமா ?
முயலுங்கள் தோற்றால் நன்றாய்
முயலுங்கள் வெற்றி வரும்

ஏசுபவர்களை நேசியுங்கள் - உங்கள்
எரிச்சலை குறையுங்கள்
எதற்கெடுத்தாலும் அறிவுரை
என்னைப் போல் பிறருக்குச் சொல்லி

ஏனோ தானோ என்று நம்
எழிலான வாழ்வை வீணாக்காதீர்கள்...!
பார்ப்பவற்றை எல்லாம் படியுங்கள்
படிப்பே நமது சுவாசம்...!

எழுதியவர் : (14-Feb-12, 9:55 am)
பார்வை : 309

மேலே