தினமும் காதலர் தினம்.....

காதலர் தினம் எதற்காக?
உன் காதலை என்னிடம் சொல்லி
பரிசு கொடுத்து
கொண்டாடவா?



அது போல நான் என்
காதலை உன்னிடம் சொல்லி
மகிழவா?


அப்படியானால்
தினமும் என் கன்ன பிரதேசத்தை
நனைக்கும் உன் முத்த மழைக்கு
பெயர் என்ன?

சின்ன சின்ன பரிசுகளை
அடிக்கடி எனக்கு கொடுத்து

உன் பார்வை மின்னல்களால்
என் தேகம் தீபிடிக்க வைக்கிறாயே
அதன் பெயர் என்ன?

கண்ணம்மா
காதலை என்றோ ஒரு நாள்
கொண்டாட எண்ணுவோர்
காதலை கொண்டாடட்டும்



நமக்கு தினமும்
காதலர் தினம்தானடா செல்லமே

எழுதியவர் : சாந்தி (14-Feb-12, 10:52 pm)
பார்வை : 208

மேலே