காதல் பரிசு
காலம் முழுவதும்
என்னை நன்றாக வாழ வைக்க
என்னை
உன் கருவறை சிறையில் வைத்து
தவமாய் தவமிருந்த
அன்பின் அன்னையே!
நீ என் மீது வைத்த காதலை விட
எது சிறந்தது?
நீ எனக்காக அவமானப்பட்டு
வாங்கித் தந்த
நல்ல வாழ்க்கை பரிசை விட
வேறென்ன காதல் பரிசு வேண்டும்?