[63] நிலவே முகக்குறை தீரடி !

சுற்றுப் புறத்தினை முற்றுங் கெடுத்தது
பற்றிச் சினந்திடல் மாணடி! -மேகம்
சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ
ஒற்றி நடப்பது வீணடி -நிலவே!
முற்றிக் குறைவது நாணடி!
கல்வி சிறந்தவர் வெல்லும் மொழியினர்
சொல்ல மறுப்பதுன் சோகமோ? -நெஞ்சம்
கல்லென்று இருத்திநீ புல்லென்று உனக்குள்ளே
மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே!
சில்லென்று இருப்பதும் போகுமோ?
ஏரி மடக்கியே கூரை போடுவார்
சேரி உயர்த்திடப் பாடுவார்! -நாங்கள்
'லாரி' நிரப்பியே சேரும் வாக்குகள்
வாரி இறைத்திடல் குமுறியோ? -நிலவே!
'காரி' பனியென உமிழ்வையோ?
நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்
மெல்ல இணைந்தனர் பாரடி! -நாளைச்
சொல்லும் வகையினில் சூழும் தேர்தலில்
செல்லும் பதில்தரு வாரடி! -நிலவே
அல்கும் முகக்குறை தீரடி!
ஃ ஃ