[64] வலிக்கும் பொறுமை..!

மாற்ற வந்த கைகள் இங்கே
கல்வி கொடுக்கும்!
மாறி விட்டால் என்ற பீதி
மயக்கம் கொடுக்கும்!
தேற்ற வந்த கைகள் இங்கே
ஊற்றிக் கொடுக்கும்!
தேவை கண்டு பின்னர் வாய்க்கு
அரிசி கொடுக்கும்!

ஊற்றி வந்த வாய்கள் வாழ்த்தை
ஓங்கி முழக்கும் !
உணர்வி ழந்த கைகள் தாமே
'ஓட்டை' அளிக்கும்!
'போற்றிப் பாடி' ஓய்ந்த வாய்கள்
போர்த்திப் படுக்கும்!
பொக்கைப் பாட்டுப் பாடும் என்னுள்
பொறுமை வலிக்கும்!
ஃ ஃ

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (15-Feb-12, 8:06 am)
பார்வை : 229

மேலே