அர்ப்பணம்
வாடுவதற்கு முன்பாக
என்பதை விடவும்
வந்து பிறந்த உடனேயே - பல பூக்கள்
வாழ்க்கையை இறை சன்னதியில்
வண்ணமாய் செய்கிறது " அர்ப்பணம் "
வாழ்க்கையும் நமக்கு அதுபோல்
வண்ணமயமாய் பிறருக்காக
வழங்குவோம் அன்பாய் " அர்ப்பணம் "
இருக்கும்போது அன்பாய் சிரிக்க வைத்து - நாம்
இறக்கும்போது உறவுகள் அழவைப்போம்
அப்போதும் அவர்களுக்கு ஆறுதலாய்
அழகான நம் உதவிகள் கொடுத்துச் செல்வோம்