ரசகுல்லா

ரசம் கொதிக்க கொதிக்க இருக்க - முழு
தக்காளி தோலுரிந்து மிதக்க

சூடாக ஏன் நினைவை வைக்கோணும் என
கொஞ்சம் குளிர்ச்சியாக நினைவை மாற்ற

ரசத்துக்குப் பதில் வெண் ஜீராவையும்
தக்காளிக்குப் பதில் ரசகுல்லாவையும் நினைத்தேன்........

கற்பனை மட்டுமல்ல என்
கவிதை பாடும் நாக்கிலும் தமிழ் ஊறியது


குறிப்பு
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி

பொருள் நயம்
சூழ்நிலை சூடாக இருந்தால் அதை இனிமையாக மாற்றும் மனோ பக்குவம் நம்மிடம் இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த இங்கு ரசமும் ரச குல்லாவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் பற்று கூட கொஞ்சம் ஒட்டி இருக்கிறது கவிதையில்

எழுதியவர் : (18-Feb-12, 3:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 194

சிறந்த கவிதைகள்

மேலே