" குலோப் ஜாமூன் "
பால் வீதி எங்கும்
பரப்புவோம் தமிழை
பூமிப் பந்தோடு இனி
புரளட்டும்
கோள்கள் எல்லாம்
" குலோப் ஜாமூன் "
ஜீராவில் மிதப்பதாய் இந்த
உலகமே தமிழிலே
உருண்டு இனிக்கட்டும்
குறிப்பு :
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
பிரபஞ்சமே தமிழால் நிரப்பப்படட்டும் என்ற
கவிஞனின் கட்டுக்கடங்காத ஆசை கவிதையில் குலோப் ஜாமூனோடு ஒப்பிடப் படுகிறது