இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீராபுரம் என்ற கிராமத்தில் லைன்ஸ் கிளப் மற்றும் உதி கண் மருத்துவமனையின் உதவியோடு கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியின் (MBA) கர்மயோகா திட்டத்தின் உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாமை நடத்தினர். 4 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழு செட்டிநாடு மருத்துவமனையிலிருந்து பொதுவான பரிசோதனையை செய்தனர். வீராபுரத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து 160 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.காய்ச்சல், கால் வலி , இரத்தக்கொதிப்பு,உடல் வலி போன்ற வியாதிகளுக்காக பரிசோதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். முகாம் நிறைவுற்ற பிறகு பேருந்தில் ஏற சென்ற மருத்துவர்களை இடைமறித்து \'வீட்ல இருந்து இவரை அழைத்துக்கொண்டு வருவதற்குள் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது எங்களை கொஞ்சம் பார்த்து அனுபிடுங்கம்மா\' என ஒரு வயதான மூதாட்டி கேட்டுக்கொண்டு வழியிலேயே பரிசோதித்து கொண்டு சென்றார்.

.உடல் சம்பந்தமான பிரச்சனைகள், கண்பிரச்சனை இரண்டும் சேர்ந்து 250 க்கும் மேற்ப்பட்டவர்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். 10 நபர்கள் இலவச கண் அறுவை சிகிசைக்காக உதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் பரிசோதிக்க வந்த நோயாளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக,௧௦௦ ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை எட்டு மணியிலிருந்து மதியவேளை வரை முகாமை நடத்தும் கிரேட்லேக்ஸ் மாணவர்களான அக்கிரிதி,திவ்யா,பிரசன்னா,பிரதீபாவுடன் சேர்ந்து முகாமை கலக்கிக்கொண்டிருந்தனர். திவ்யா கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை நான், நீ என்று போட்டியிட்டு யாருக்கும் பயனில்லாமல் துளாக்கி குப்பையில் வீசியதுதான் மனசை நெருடியது.வறுமையும், அறியாமையும் இருக்கும்வரை நம் நிலை இதுதான்!

எழுதியவர் : கவிஞர்.வைதேகி பாலாஜி (21-Feb-12, 3:28 pm)
பார்வை : 367

மேலே