திசையறியா பறவைகள்

மண்ணை தொடுவதற்கு முன்போ
எல்லோரும் ஒன்றாய்
கவலையின்றி கருவறையில்...

மனிதனாய் பிறந்த அந்நாள்
எல்லோரும் அழுகையின்
அரவணைப்பில்
அர்த்தமற்ற அழுகுரலோடு...

எல்லோரும் நினைப்பும்
பசிக்காக அழுதோம் என்று,
யாருக்கு தெரியும்
பின்னால் நடக்க இருப்பதை
முன்னறிந்து அழுதோமோ என்னவோ...

இழிவாக பார்ப்போர் மத்தியிலும்
இரவல் கேட்கும் இந்த
பிஞ்சு விரல்கள் செய்த
பாவம் என்ன ???
மண்ணில் பிறந்தது குற்றமா ???
மனிதனாய் பிறந்தது குற்றமா ???

கனவுகளை சுமக்க வேண்டியவர்கள்
கல்லையும் மண்ணையும்
சுமப்பது
காலத்தின் குற்றமா???

அன்னை சோறுட்டும் வயதினில்
அடுத்தவரின் எச்சிலை
எடுக்க வைத்தது
ஆண்டவனின் குற்றமா ???

யாரோ செய்த குற்றம் -இவர்கள்
மனதிலும் தலையிலும் பாரமாய்...
எதிர்காலத்தை அறியா
திக்கற்ற பறவைகளாய்
சிறகிருந்தும் பறக்கமுடியாமல்...

எழுதியவர் : Anithbala (23-Feb-12, 12:05 am)
சேர்த்தது : Anithbala
பார்வை : 265

மேலே