உன்கையில் உன்னுலகம்
கருவறை தொடங்கி
கல்லறை வரை
காணும்யாவும் அழகடா,
கண்காட்டும் இச்சைகளால்
காணமற்போகும் மனித இனமடா...
இலட்சிய கனவுகளை
இதயத்தில் சுமந்து
நம்பிக்கை ஒளி சுடர்விட
அன்பெனும் ஆயுதம் தாங்கி
அணையாமல் நீயும் காத்திடு...
எதிர்காலம் நட்பாலே
ஏற்றம்பல கண்டிடவே
மாற்றம்பல செய்திடு
மகிழ்ச்சிதனை தந்திடு...
உள்ளங்கையில் உழகமடா
உன்னால் எதுவும் முடியுமாடா
உழைப்பே உனக்கு தெய்வமடா
இதுதான் உலக உண்மையடா...