முளைக்காத விதை

மழை காலம்னு கூட பார்க்காமல் தினமும் பார்த்து பார்த்து வருகிறான் வீட்டிற்கு பின்னால் சென்று அந்த பிஞ்சு முகத்து சின்ன பையன் ...

நானும் கேட்கணும் கேட்கணும் என்று நினைத்து கேட்காமல் போய்விட்டேன் ....

ஒருவாரம் கழித்து.....

அவன் முகம் வாடியிருந்ததை ...பார்த்து

கேட்க முயன்றேன் ...

என்னப்பா தினமும் வீட்டிற்கு பின்னால்

சென்று வரும்போது மகிழ்ச்சியாய் இருப்ப ..

இப்பலாம் போய்ட்டு திரும்பி வரும்போது

சோகமா இருக்ற...

அவன் சொன்னது " பிறகு என்ன அங்கிள் என் வீட்டுக்கு பின்னாடி ஒரு மரம் வளர்க்கலாம்-னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே முளைக்க வைத்தேன் ..தண்ணியும் தினசரி விட்டேன்.. அனா இப்ப வரை முளைக்கவே இல்ல..."

நான் கேட்டேன் என்ன முளைக்க வைத்தாய்

அவன் சொன்ன பதில் என்னை திக்கு முக்காட வைத்தது ...

" கோழி முட்டை " தான் முளைக்க வைத்தேன் ...

.........................?????????????

எழுதியவர் : பிரியா பாரதி (26-Feb-12, 5:04 pm)
பார்வை : 580

மேலே