குரலின் குரல்

தாயின் பிரசவ வலிக்கு ஆறுதல் மொழி
குழந்தையின் அழுகை குரல்.
குடும்பத்திற்கு சோறு போடும்
வியாபாரியின் பாசக் குரல்.
அதிகாலையை வரவேற்கும்
பட்சிகளின் பரவசக் குரல்.
கன்றிற்கு அரவணைப்பை அழைப்பில் தெரிவிக்கும் ஆவின் அன்புக் குரல்.
ஈராக்கை உருக்குலைத்த
அணுகுண்டுகளின் ஒலக் குரல்.
உன்னை வாழ வைக்கும்
உன்னிதயத்தின் உயிர்க் குரல்.
ஊரை உறங்க வைக்கும் தென்றலின்
தாலாட்டுக் குரல்.
பூக்களின் பூப்புச் செய்தியை சொல்லும் வண்டுகளின் காதல் குரல்.
இறைவனுக்கு மட்டும் கேட்கும்
ஊமைகளின் மௌனக் குரல்.
உலகம் அளந்த குறலுக்கு உண்டு மட்டற்ற ஞியான குரல்.

எழுதியவர் : saranya (28-Feb-12, 10:24 am)
Tanglish : kuralin kural
பார்வை : 204

மேலே