என் அன்பு மகனே/ மகளே

நான் ஒரு வார்த்தை பலமுறை
சொல்லிருந்தாலும் ஏளனம் செய்யாதே ...
உனக்கு புரிந்து கொள்ள
ஒரு வார்த்தை ஓராயிரம் முறை
சொல்லி தந்தேன் - நீ
குழந்தையாய் இருக்கும் போது


என் உடைகள் விலகிருப்பது
எனக்கு தெரியாமல்தான் ...
உனக்கு உடைகள் உடுத்தி
உன்னை அதிகம் அழகு பார்த்தது
நான்தான் என் செல்லமே ..- நீ
குழந்தையாய் இருக்கும் போது

என்னை குளிக்க வைக்க
அனுதினம் பார்த்து
தயங்கும் உன்னை - விரட்டி
பிடித்து குளிக்க வைத்து ...
பெருமிதம் கண்டது நான் - நீ
குழந்தையாய் இருக்கும் போது

பசிக்கும் என் வயிறுக்கு
கிடைக்க போகும் உணவுக்கு
மௌவனமாய் காத்திருக்கிறேன்
பசி இல்லாத போதும்
பால் ஊட்டிய ஞாபகம் எனக்கு - நீ
குழந்தையாய் இருக்கும் போது

கையில் கொடுத்த உன்
பத்து ரூபாய் ..இன்னும்
மிந்தியில்தான் ...நீ வளர்க்கும்
பையனுக்கு மிட்டாய்
வாங்கி கொடுக்க ...- நான்
வைத்திருக்கும் சம்பாதயம்

என்னை பத்திரமாய்
பார்க்க வேண்டாம் மகனே/ மகளே
தரித்திரமாய் பார்க்காமல்
இருந்தால் போதும் - நான்
வளர்த்த என் அன்பு மகனே/ மகளே

எழுதியவர் : நெல்லை பாரதி (28-Feb-12, 10:40 am)
பார்வை : 204

மேலே