இது தான் வேறுபாடோ !
நாய், பூனை கூட
தன் இனத்தில் நிறம் பார்ப்பது இல்லை,
மனிதன் மட்டும் பார்க்கிறேன்
கருப்பு, வெள்ளை நிறம் என்று !
காகம் ஒன்றுக்கு அடிபட்டால்
மேகம் போல் காககூட்டம் கூடிவிடும்,
மனிதன் ஒருவன் அடிபட்டால்
அவன் மரணம் வரை யாரும் அவனை தொடுவதில்லை !
விலங்குகள்கூட பசிக்காகத்தான்
தன் இனத்தை வேட்டையாடுகின்றன,
மனிதன் மட்டும்தான்
காசுக்காகவும், காமத்துக்காகவும்
மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும்
தன் இனத்தை வேட்டையாடுகிறான் !
ஒருவேளை இது தான்
மனிதனுக்கும்
அவைகளுக்கும் உள்ள வேறுபாடோ !