என் தமிழ் ஆசிரியை.....
என் பள்ளி வாழ்க்கையில்
என்னை செதுக்கிய உளியாய்....
அந்த தமிழ் ஆசிரியை.....
ஆங்கிலப் பள்ளியில்
ஆங்கிலம் தெரியாமல்
தவித்த எனக்கு....
தமிழ் வகுப்பெல்லாம் தளிர் வகுப்பாகும்....
என் தடுமாற்றம் தெரிந்து
என் தமிழ் வளர்த்த அவள்....
எஞ்சிய தேவதைகளின் தொகுப்பாகும்...
என் எதுகை மோனைக் கவிதைகளெல்லாம்
அவளால் அழகாய் தோன்றின.....
என் பேச்சு கூச்சமும் பயமும்
அவளால் காணமல் போயின....
பேச்சு போட்டிகளும் கவிதைகளும்
என்னை மேம்படுத்தும் களங்களாயின....
நதியை சார்ந்து தொடங்கும்
நாகரிகம் போல ....
அவளை சார்ந்து தொடங்கிற்று
என் நாகரிகம்......
என் மனதோடு எப்போதும்
வற்றாத ஜீவ நதியாய்...
அந்த தமிழ் ஆசிரியை....