இதுதான் விதி என்பதோ?.....

உன்னை பார்த்தேன் -அப்போது
நீ பருவப்பெண்ணா?- இல்லை !
காத்திருந்தேன் கண்மணியே
காலம் கணியட்டுமென

உனக்கு தெரியுமா ?...
நீ செதுக்காத உன்னழகை
நீ பதுக்காத உன் அசைவை
நீ தீட்டாத உன் வண்ணத்தை
நீ அறியாமல் ரசித்தேன் என்பது

அனாலும் ......
காத்திருந்தேன் கண்மணியே
காலம் கணியட்டுமென

காலமும் கனிந்ததடி
என் கண்களும் கனிந்ததடி
காதலைச்சொல்ல வந்தேன் -நீயோ
சாதலைச்சொல்லி நின்றாய்!.....

மல்லிகையாய் உனை சரம்கோர்க்க
நினைத்தேனடி -நீயோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து நின்றாயடி ......

இறுதிவரை காத்திருந்தேனடி
இலவம்பஞ்சாகியதோ என் காதலடி?
இதுதான் விதி என்பதோ?
இருந்தாலும்
இன்றுபோல் நீ வாழ்க

எழுதியவர் : nilapen (6-Mar-12, 9:38 pm)
பார்வை : 211

மேலே