விழித்தெழு பெண்ணே

விடியாத இரவுகள் என்று எண்ணி
விடிந்தபின்னும் பெண்ணே
விழிமூடி உறங்காமல்
விடுதலை வேண்டி நீ
விழித்தெழு பெண்ணே

சாத்திய கதவின் பின்னே
சாந்தமாய் அமர்ந்ததும்
ஆண்களின் வெற்றிக்கு
பின் இருந்து வழிகாட்டியதும்
கடந்தகால பெண்மை
சாதித்து காட்டி
சரித்திரம் படைத்து
களங்கம் இல்லாமல்
கலங்கரை விளக்காய்
ஒளிர்கிறாள் இன்று

விடுதலை இல்லை என்று
விரக்தியாய் உட்கார்ந்து
உன்னை நீயே
சுயவன்முறை செய்யாமல்
சுதந்திர வானில்
சுந்தரமாய் உலா வர
உனக்கும் உரிமை உண்டு
விழித்தெழு பெண்ணே

பெண்மை என்பது
மென்மையான இனம் மட்டும் அல்ல
மேன்மையாகும் இனம் ஆகும்.See More

எழுதியவர் : janany (7-Mar-12, 10:11 pm)
சேர்த்தது : kajany
Tanglish : vizhithelu penne
பார்வை : 790

மேலே