ஜெயிப்பது நிஜம்....!
மொட்டை பாறைகளின் மேனியில்
விழுந்து தெறிக்கும்
நீர் வீழ்ச்சியில்
எதிர் நீச்சல் போடவேண்டும் ...!
நதி நடந்து வந்த
கரடு முரடான பாதைகளில்
இந்த மானுடம் பயணிக்க வேண்டும் ...!
நதியோடு எதிர் நீச்சலிட்டு
நதிமூலம் காண வேண்டும் ...
வெற்றி எட்டிவிடும்
தூரத்தில் தான்
தன்னம்பிக்கையோடு
இந்த மானுடத்தின் பயணம் ...!
பொய் தரிசனத்தோடு
செயற்கையாய் வாழும்
முகமூடி மனிதர்களுடன்
வாழ்ந்து வென்றுவிட்ட
இந்த மானுடம்
இயற்கையின்
உண்மைத்தரிசனத்தோடு
வரும்
நதியின் மூலமும் அறியும் ...!
மானுடம்
ஜெயிப்பது நிஜம் ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
