என் மகள்

என் மகள்
மகிழ்ச்சியின் உச்சத்தை உணர்த்த
மணிவயிற்றில் மலர்ந்தவள்
வாழ்வை முழுமையாக்க
வையகத்தில் ஜனித்தவள்
வழுக்கும்போது துணையாக நின்றவள்
தோல்வியை துடைக்க வந்தவள்
துவழும்போது நம்பிக்கை தந்தவள்
கவிதை சமைக்க கருத்தாய் வந்தவள்
கனவு காண கற்றுத்தந்தவள்
நிழலுக்கும் உணர்வு தந்தவள்
அவள்
பொய்யென்றபோதும்
நிஜம்போலவே நெகிழ்சித்தருபவள்

எழுதியவர் : கவிஞ்சர் வைதேகி balaji (9-Mar-12, 9:57 am)
பார்வை : 225

மேலே