துப்புரவுத் தோழர்......
மனம் குவிய
இறையைத் தொழும்
ஞானியும் இவனும் ஒன்று....
குப்பைகள் விழும் வீதியிலே....
இருப்பான் இவன் அதிகாலையிலே....
நரி முகத்தில் பரி முகத்தில்
முழிப்பவர் மத்தியில் ....
இவன் சற்று விலகியவன்....
வீதியில் விழும் அழுக்குகளை....
ஒப்புற விலக்கியவன்.....
குப்பையாய் வாழ்பவர்க்கு
குட் பை சொல்லி....
கூடை கூடையாய்
குப்பைகள் அள்ளி....
ஒவ்வொரு தெருவிலும்
இவன் போல் பலர்.....
என் தெருவிலும் சிலர்....
ஆறு மணி தொடங்கி நாத்தத்தில் வாழ்பவன்.....
ஆறு மணிக்கு மேல்....
போதையில் வாழ்கிறான்....