வேதாவின் ஆத்திசூடி - அகரவரிகளில் - ஒ காரம்

அ’ கர வரி அடிகளில்

‘ஒ’ கரம்


ஓப்புரவு ஒழுகு.


உலகத்தோடு பொருந்த, உலகநடையைத் தெரிந்து அந்த வழியிலே நட.
இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1. ஒத்தாசை செய்து வாழ்.
2. ஓப்புரவறிந்து ஒழுகு.
3. ஓப்பமிடமுன் உள்ளடக்கம் வாசி.
4. ஓட்டுக் கேட்டல் தவிர் ஒரு மனப்பாடுடை வழிபாடு தெளிவுடைத்து.
5. ஓற்றுமை ஏற்றமுடைத்து.
6. ஒழுங்கீனம் மதிப்பிறக்கும்.
7. ஒழுக்கம் ஒருவனுக்கு ஒளி தரும்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2010.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (11-Mar-12, 3:52 am)
பார்வை : 189

மேலே