நல்ல விதைகளை விதைப்போம்..!!

தமிழருமை தமிழினிமை என்று
சொல்லிச் சொல்லி வெறுமையாய்
கடத்திய காலங்கள் போகட்டும்
தமிழில் அதுயில்லை இதுயில்லை
அறிவியல் வளர்க்க வழியில்லை - என்று
இக்கரைக்கு அக்கரை பச்சையாய்
தவரவிட்ட தருனங்கள் போகட்டும்
தமிழ் மெல்ல தந்நிலை குன்றுமோ
தரணியில் இல்லாமல்தான் போகுமோவென்று
புலம்பித் திரிந்த பொழுதுகள் போகட்டும்
தமிழினிய அற்புதக் கவிதைகள் காவியங்கள்
தினம்படிப்போம் தமிழினிமை முழுதுணர்வோம்
தமிழமுதம் குடித்துக் களிப்போம் கொண்டாடுவோம்
இனியநம் பிள்ளைகளுக்கு தமிழை தமிழுணர்வை
ஊட்டிவளர்ப்போம் தமிழும் நாமும் தழைத்தோங்குவோம்
உலகே நம்மை வியந்துபார்க்கும் நாள் விரைவில்வரும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (12-Mar-12, 9:57 am)
பார்வை : 484

மேலே