கதறி நாங்க அழுகுரோமே!!!
தமிழோடு வாழ்வோமின்னு
தவமிருந்து வாழ்ந்ததென்ன??
தரிகெட்ட நடத்தையாலே
தமிழிழம் தீர்ந்ததென்ன??
பெத்த ஆத்தா நெஞ்சு கிழிச்சு
பால் உண்ணும் பிள்ள போல
கொஞ்ச மண்ண எடுத்துவந்தேன்
தினம் திருநீரா பூசிக்கத்தான்
அடிபட்டு வாழ்ந்து வந்தோம்
அணுகுண்ட தாங்கிக்கிட்டோம்
புலிதலைவன் செத்ததினால்
புகலிடத்தை இழந்தோமே!!
கதறி நாங்க அழுகுரோமே
காதுனக்கு கேக்கலயோ
அகதியாக வந்ததினால்
அலட்சியமாய் போயிட்டுதோ
தமிழ் நானும் பேசியதால்
தட்டிகேட்க ஆளும் இல்ல - மகனே
அடிமையாவே செத்திடடா
அழைச்சி போக யாரும் இல்ல