பெண்மை-புதிர்.
பெண்ணைப் பற்றிய
என் தேடல் யாவும்
வினாக்குறியுடனே
முற்றுப் பெறுகிறது.
பெண்ணினம் குறித்த
தகவுகளனைத்தும்
ஆணாதிக்க முலாம் பூசப்பட்டிருப்பதால்
பிடிபட்டாலும்
புரிபடவில்லை
பெண்மை.
ஆணினத்தால் வரையறுக்கப்பட்ட
பெண்ணுக்கான வரையறைகளே
மனித நாகரீகத்தினுடைய
முரண்களின் ஆதியும், உச்சமும்
புரிதலுகப்பாற்பட்ட புதிர்
பெண் என்பதை
இன்றளவும்
ஆண் புரிந்து கொண்டதேயில்லை.
உலகில் எவராலும்
வாசிக்கபடா புத்தகம்
பெண்.
இன்றளவும் உடைபடா
உலகின் மிகப்பெரிய மௌனம்
பெண்.
விளங்காத,
விளக்கிக் கூற இயலாத
கூற்றுகளைக் கருக்கொண்டது
கடவுள் எனில்
பெண்மையும் கடவுளே......!