ஸ்ரீபுரம்.

வலைத்தளத்தில்
ஸ்ரீபுரம் பொற்கோவிலின்
தரிசனம் கண்டேன்.
ஆகா.....ஆகா.....என்ன அழகு!
எத்தனை அற்புதம்!
இந்தப் பொன்மனம்
எங்கிருந்து கிட்டியது.
ஆம், இதனை உள்ளத்தில்
முதலில் உருவாக்கிய
அப்பெருந்தகையின்
மனம் யாவும் பொன்னால் ஆனதுவே.
பொன்மனத்தாலேயே
பொற்கோவில் பொலிந்திருக்கின்றது.
பொற்கோவில் கண்டவுடனே
என்மனமும் பொன்னாவது கண்டேன்.
புன்மனப்பாங்கு
பொன்மனமாயிற்று.
மனத்தில் பொற்கோவில்
மானசீகமாய் எழுந்தது.
அகிலத்தில் அவரவர்
மனம் யாவும்
பொற்கோவில்கள் பொலியவே
ஸ்ரீபுரம் பொற்கோவில்
திருவுளம் கொண்டுள்ளது.
திருவுளத்தில் பெருகும்
அருள் வெள்ளத்தில் திளைத்து
மருள் நீப்போம். இருள் அகல்வோம்.
அருள் மயத்தில்
ஆனந்தித் திருப்போம்.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (17-Mar-12, 6:11 pm)
பார்வை : 260

மேலே