கண்ணீர் அஞ்சலி…
சில தினங்களுக்குமுன் நடந்த, மனதை வருந்தசெய்த நிகழ்வு இது, சில வரிகள் எழுதுகிறேன் எழுத்து நண்பர்களுக்காக…
எனது நண்பனின் அம்மாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
சில தினங்களில் உடல்தேரி வீட்டிற்கு அழைத்துவர
நண்பன் இருசக்கர வாகனத்தில் சென்றான்.
வரும்போது எப்பவும் போலவே வண்டியை விரைவாகவே ஓட்டியிருக்கிறான். வரும்வழியில் அம்மாவிற்கு மயக்கம் வரவே
குரல்கூட கொடுக்கமுடியாமல் மயங்கி சரிந்திருக்கிறார்.
வாகனம் சென்றவேகத்தால் சாலையில் விழுந்தும் விட்டார்.
தலையில் அடிபட்டதால் மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் போராடிப்பார்த்தும் பயனில்லை. அவர் உயிரிழந்தார்.
தானே தன் அம்மாவின் இறப்பிற்கு ஒரு காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் நண்பன் தவிக்கிறான்.
ஏதோ எங்களால் முடிந்த ஆறுதல் சொல்லி அவனைத் தேற்றிவருகிறோம்.
வாகனத்தில் முதியோரையோ, குழந்தைகளையோ கூட்டிக்கொண்டுபோகும் நண்பர்களே…
நிதானமாக செல்லுங்கள். மிக கவணமாக செயல்படுங்கள்.
நிதானமாக இருப்போம், பெரும் இழப்புகளை தவிர்ப்போம்.