உனக்குள் உலகம் ...!

உனக்குள் உன்னை பார்
உலகம் உன்னைப்பார்க்கும்

கடந்து உள் பார்
அனுவென்னும் கடவுள்
ஜோதியாய் அவதரிப்பார்...!

ஜோதிக்குள் ஜோதியாய்
அணுவுக்குள் அணுவாய்
எங்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது
வடிவமில்லா வடிவத்தில்...!

இயக்கமே பிரபஞ்சமாய்
பரிணாமமே இயக்கமாய்
இயங்கிக்கொண்டிருக்கும் போது
இளைஞனே நீ மட்டும்
இயங்காமல் இருப்பதேன்...?

உன்னுள் லட்சியத்தை விதை
இயங்கு இயங்கு
இளைஞனே வெற்றிப்பூக்கள்
உன்னை ஆசீர்வதிக்கட்டும்...!

உன் இயக்கமே வாழ்க்கையானால்
உலகம் உன் கையில் பம்பரமாகும்...

இளைஞனே விழித்துப்பார்
வெளிச்சம் உள்ளேவரட்டும்
உன்னை நம்பு
உலகம் உன் வசப்படும் ...!

எழுதியவர் : வெற்றிநாயகன் (18-Mar-12, 11:03 pm)
பார்வை : 352

மேலே