தோழிக்கு ( பாகம் II )

தோழியே,

என் வாழ்வில் தீடிரென்று வந்தாய்
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றினாய்
தோல்வியில் துவண்டு விழுந்தபோது
கைகொடுத்து எழுப்பினாய்....
வெற்றி பெற்றபோது முதலவதாக
கைத்தட்டி உற்சாகபடுதினாய்...
தவறான பாதையில் செல்லும்போது
கைப்பிடித்து சரியான பாதையை வழிக்காடினாய்....
எனது இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ள
என் கூடவே இருந்தாய்....
மற்றவர்களிடம் பாசமாக பேசுவது
கோபப்படாமல் இருப்பது, பொறுமையாக இருப்பது
என்று உன்னிடம் நிறைய கற்றுக்கொண்டேன்....
என் வாழ்வில் இவ்வளவு மாற்றங்களை தந்துவிட்டு நீயோ என் வெற்றியின் போது
ஒரு மூலையில் சாதரணமாக நின்று
கைத்தட்டுகிறாய்....
எங்கு தேடினாலும் உன்னை போல் ஒரு தோழி
இனி எனக்கு கிடைக்கமாட்டாள்....
இன்னும் சிறிது நாட்களில்
கல்லூரியை விட்டு நாம் பிரிய போகிறோம்
உன்னை பிரிவதை பற்றி எண்ணினால்
என் கண்கள் கலங்குதடி....

நட்புடன்,
நவீனா.அ

எழுதியவர் : நவீனா.அ (18-Mar-12, 11:43 pm)
பார்வை : 592

மேலே