உறவின் அளவுகோல்(படித்ததில் பிடித்தது)

கவிதை அல்ல
படித்ததில் பிடித்தது ..

துன்பதின்போதும்
துயரத்தின்போதும்
துவண்டுவிடாமல்
தூரமாக விலகிவிடாமல்
துரிதமான உதவியை
துணிவுடன் நமக்குதவி
செய்யும் போதுதான்
உறவினர்கள், நண்பர்களின்
உறவின் நிலை புரியும் ..

எல்லோருக்கு தெரிந்த கதைதான்

காசிராஜன் நாட்டில் உள்ள வேடன் மானுக்கு குறி வைத்த அம்பு திசைமாறி , நன்றாக வளர்ந்து செழித்த ஒரு மரத்தின் மீது விஷம் தடவிய அம்பு பாய்ந்துவிட, மரம் கருகி பட்ட மரமாகிவிட , மரத்தில் வாழ்ந்துவந்த அனைத்து பறவைகளும் வேறு இடம் தேடி பறந்து விட, ஒரே ஒரு கிளி மட்டும் பட்ட மரத்தின் உள்ளே இருந்து இரைதேடவும் செல்லாமல் , அதன் உள்ளே மயங்கிய நிலையில் இருக்க, அதைக் கண்ட இந்திரன் மானிட பிறவி எடுத்து மரத்தில் இருக்கும் கிளியிடம், எல்லா பறவைகளும் அருகில் உள்ள செழுமையான மரத்தில் வாழ நீ மட்டும் ஏன் உணவின்றி சாகும் நிலையில் இதில் இருக்கவேண்டும் என வினவ , கிளி கோவம் கொண்டு தேவர்களுக்கெல்லாம் தலைவனே , தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய நீரே இப்படி வினவலாமா என கேட்க அதன் காரணத்தை கூறியது". "நான் நன்றாக வாழும் போது, எனக்கு உணவு கொடுத்து , பல எதிரிகளிடமிருந்து என்னை காப்பாற்றி , அதிக மழைக்காலங்களிலும் என்னை காப்பாற்றி எனக்கு உதவி புரிந்த அந்த மரம் பட்டுப்போன நிலையில் நான் அதை விட்டு பிரிந்து செல்ல என் அன்பு மனம் கேட்கவில்லை .."நான் மகிழ்ச்சியாக இருந்த காலத்தின் போது உதவி செய்த அதற்க்கு , துன்பம் வரும் போது அதை விட்டு பிரிய மனம் வரவில்லை என்று கூறியது .இதை கேட்ட தேவர்களின் தலைவன் , அதன் உண்மையான் உறவு , தர்மத்தை கண்டு நெகிழ்ந்து உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார் ..
அப்போது தனக்கு என் எதுவும் கேட்காமல்
"பட்டு போன மரம் மறுபடியும் துளிர்விட்டு வளர கேட்டது " ! இதை கேட்ட தேவர்களின் தலைவன் கிளி கேட்டதற்கு இணங்க , பட்ட மரத்தை மறுபடியும் துளிர் விட செய்து , முன்பைவிட அதிக செழுமையுடன் வளர செய்தார் "

"அதன் பின் கிளி நீண்ட காலம் வாழ்ந்து மோட்சம் அடைந்தது "

கிளியை போன்று நாமும் "உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் , துன்பம் வரும் காலங்களில் பறந்து விடாமல் உதவி செய்து , அன்பு உறவை மேற்கொண்டால் வாழ்க்கை அனைவருக்கும் நன்றாக இருக்கும் அல்லவா" !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று நல்ல அன்பு "உறவுக்காக"



எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (19-Mar-12, 10:54 am)
பார்வை : 345

மேலே