இவன் தான் என் நண்பனா!!!!!!!!!!!!!

அவன் பாடாய் படுத்துகிறபோது
ஏன் பழகினோம் என்று
வெறுக்க தோன்றுகிறது

அவனை விட்டு பிரிந்தபிறகு
ஏன் விலகினோம் என்று
நேசிக்க தூண்டுகிறது

அதிகமாக சிரிக்கவைக்கிறான்
தினமும் சண்டைபோடவைக்கிறான்
எனக்காக எதையும் செய்யும் அளவுக்கு
உலகில் வாழ்கிறான்

எந்த காரணமுமின்றி
ஏன், எதற்க்கு,
என்ன உறவென்றே தெரியாமல்
எனக்காக ஓயாமல்
உதவி செய்கின்றான்

எப்போதும் இந்த நீளமான கைகள்
எனக்காக என்ன செய்யும் என்று யோசித்தேன்
இப்போது புரிந்துகொண்டேன் என் கண்ணீரை கண்டதும்
அவன் முழுதுமாய் எனக்காக கரைகிறான்
இப்போதும் பிரிந்தே இருக்கிறேன் கண்ணீரோடு

எழுதியவர் : டேவிட் ஸ்டாலின் (19-Mar-12, 1:01 pm)
சேர்த்தது : டேவிட் ஸ்டாலின்
பார்வை : 409

மேலே