எது இன்பம் ?
ஒருவனக்கு துன்பம் என்று இருப்பது
மற்றொருவனுக்கு இன்பமாக முடிகிறது
உழவன் படும் துன்பத்திலே - நாம்
உண்டு இன்பம் காண்கிறோம் !
பட்டாசு தொழிலாளியின் துன்பத்திலே - நாம்
பட்டாசு வெடித்து இன்பம் அடைகிறோம் !
புத்தாடைக்கு சாயம்போட்டு துன்பத்தில் - நாம்
புத்தாடை உடுத்தி இன்ப பண்டிகை காண்கிறோம் !
எல்கையில் துன்பப்பட்டு பாதுகாத்து
வரும்போது - நாம்
எல்லை இல்லா இன்பத்தில்அல்லவா இருக்கிறோம்
இதுவா இன்பம் ?
நாமே ஒரு தொழில் புரிந்து
அதில் முதலில் துன்பம் வந்தாலும்
பின் முயற்சியின் முடிவில் வரும்
வெற்றி அல்லவா இன்பம் ..
அப்படி செய்தால் நாடும் வளரும்
அனைவரும் உமது இன்பத்தை
திரும்பி பார்க்கும் போது வரும்
இன்பம் அல்லவா உண்மையான இன்பம் !
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "இன்பத்திற்காக"