கள்ளத்தனம் ஏனடா?
கண்ணோடு கண் வைத்து
கட்டியணைத்து
கன்னத்தோடு கன்னம் உரசி
இதழோடு இதழ் சேர்த்து சுவைத்து
கணவனாய் வாழ்ந்தவன் - நீ !
இன்று கள்ளத்தனமாய் வந்து
தெளிந்த நீரோடை போல் இருந்த
என் இதயத்தை கட்டியணைத்து
இதழ் பதித்து முத்தமெனும்
பெரிய பாரங்கல்லை ஏன்
தூக்கிபோட்டாய் மீண்டும்
நான் கலங்கி நிற்கவா ?.
தெளிவில்லாமல் போகவா ?
மலருக்கு மலர்தாவி
தேன் குடிக்கும் வண்டா நீ !
நான் ஒன்றும் மலரல்லவே !
உன் மனைவியடா !