"சன்னல் பூக்கள்"
![](https://eluthu.com/images/loading.gif)
பூக்கள்தான் இவை;
புன்னகைக்க மறந்த
பெண்பூக்கள்;
இவைகளுக்கு
கூந்தல் ஏறவும்
கொடுப்பினையில்லை,
கூடையில் சேரவும்
அனுமதியில்லை;
வாசமிருந்தும்
வண்டு ஏனோ வரவில்லை;
மணம் இருந்தும்
மணவறை நேரம்
மரணித்து விட்டது;
கோயிலுக்கு சென்றாலும்
அர்சனைக்கு இவைகளை
தெய்வம் கூட;
இனம் மாறி ஒரு
நாரோடு சேர்ந்திட
நானும் நீயும்
அனுமதிக்கவில்லை;
பூந்தோட்டதில் இவற்றை
பெற்றவன் கூட மதிக்கவில்லை;
மனமுடைந்து போன இவைகளுக்கு
மலர்வலையத்தில் கூட
ஏனோ இடம்
ஏமாற்றபடுகிறது;
ஆனாலும்.........
கண்ணிர் துளிகளை
காய்ந்த தடத்தில்
ஓடவிடும் இந்த பூக்கள்
வாடிய பின்னும்
வாசத்தை வீசுகின்றன
வாசலை நோக்கி........
புன்னகையோடு புணராத
இந்த பூக்கள்
இன்னமும் இருக்கின்றன
சன்னலக்கு பின்னால்
கம்பிகளின் நிழலில்
ஒளிந்திருக்கின்றன...
விடியலை நோக்கி..........?!!?..!?