உயிரான ஓவியம் உசுறற்று கிடக்குது
சிந்தனையில் கருவாகி
சிந்திய வண்ணங்கள்
ஓவியமாய் உயிர் வாழ்கிறது........
இமை மூடாமல்
விழி வேறு பார்வை பாராமல்
உன்னோடு மட்டும் இருந்தால்
உள்ளே நானும் இருக்கிறேன் .......
படைத்த பிரம்மா-கலைகளின்
படைப்பாளிகளுக்கு திறமைகளோடு
பட்டினியையும் ஏன் கொடுத்தாய்
கடவுளுக்கு நன்றி
காகிதத்திற்கு உயிர் கொடுக்காததிற்கு !
கொடுத்திருந்தால் அழுதிற்கும்
கண்ணீர் துளிகள் அளித்தற்கும் ...........
வரைந்த மனிதா
உனை வாழ்த்த மனமில்லை
வாழ்த்துகள் உன் வறுமையை
போக்கிவிடுமா?
கண்ணீர் துளிகளை
காற்றில் கடவுளிடம்
அனுப்புகிறேன்.....