இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி

முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !

அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான !

முதியவர் பண்கள் குழந்தைகள் அனைவரையும்
மூர்க்கத்தனமாக கொன்று குவித்தான் !

பாதுக்காப்பு வளையம் என்று சொல்லி மக்களைக் குவித்து
பாதுகாப்பாக ராணுவம் நின்று கொன்றுக் குவித்தான் !

மனித உரிமை மீறல்கள் அத்து மீறல்கள் நடந்தது
மனிதாபிமானமற்ற படு கொலைகள் நடத்தினான் !

கொத்துக் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது
கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றான் !

தடை செய்யப்பட்ட ரசாயணக் குண்டுகளை
தடையின்றிப் பயன்படுத்தி சாகடித்தான் !

கத்தியால் குத்திக் கிழித்து சித்திரவதைச் செய்து
கடைசியில் உயிர் பறித்தான் கொடூரன் !

பச்சிளம் பாலகன் கண் முன்னே அவனது
பாதுகாவலர்களைக் கொன்று பாலகனையும் கொன்றான் !

செத்தப் பிணங்கள் மீதும் எத்தி மிதித்து
சாவை உறுதி செய்து சந்தோசப் பட்டான் !

விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று
வீதியில் சுட்டு வீழ்த்திச் சென்றான் !

அப்பாவி மக்களை அழித்துக் கொன்றான்
அடப் பாவி அவன் இதயம் இல்லாதவன் !

கவிதை எழுதினோம் கட்டுரை எழுதினோம்
கண்டனம் செய்தோம் கண்டுகொள்ள வில்லை அன்று !

சேனல் நான்கு தொலைக்காட்சி உலகின்
செவிட்டை நீக்கி கேட்க, பார்க்க வைத்தது !

தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன் ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !

பாவத்தின் பரிசாகப் புற்று நோய் வந்துவிட்டது
பாவி அவன் நோயால் சாகக் கூடாது !

அய் .நா. மன்றமே முன் நின்று உடன்
அவனை சாகும் வரை தூக்கிலிடுங்கள் !

எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் கூட்டாக
எம்மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றவன் !

ஜெயித்து விட்டதாக கொக்கரித்தக் கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி !

இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !

பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது !

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள் !
--

எழுதியவர் : இரா .இரவி (22-Mar-12, 7:06 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 211

மேலே