அந்த சில நாட்கள்
ஆசையிலே அலைந்த சிலநாட்கள்,
அந்தியிலே அவதியுடன் பலநாட்கள்,
காதலுக்காய் தொலைத்த இளநாட்கள்,
மனக்கவலையில் உழன்ற இடைநாட்கள்,
விடுதலையாய் விளைந்த உரநாட்கள்,
விருப்பமிலா வாழ்வில் மணநாட்கள்,
அன்புக்கு ஏங்கின, கலங்கின நாட்கள்,
அன்னையைக்கூட மறந்த மந்திரநாட்கள்,
இருக்கும் வாழ்வோ குறைநாட்கள்,
கண்ணே இதில்
வதங்கி வாடுதல் ஏன் வரும்நாட்கள்.